Asianet News TamilAsianet News Tamil

Dasara Teaser: கீர்த்தி சுரேஷையே காணுமே...! நானியின் மிரள வைக்கும் நடிப்பில் வெளியான 'தசரா' டீசர்!

நானி வித்தியாசமான மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ள, 'தசரா' படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

First Published Jan 30, 2023, 4:46 PM IST | Last Updated Jan 30, 2023, 4:46 PM IST

இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடில்லா இயக்கத்தில், நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் திரைப்படம் தசரா.  இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இப்படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மற்றும் கன்னடா ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இப்படம், மார்ச் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இப்படத்தில் இதுவரை நடிக்கிறாத மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் நானி.
அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த போது, கீர்த்தி சுரேஷ் படக்குழுவினர் அனைவருக்கும் தங்கக்காசு வழங்கியது விடைபெற்றார். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், சற்று முன்னர் வெளியான நிலையில்... ரசிகர்கள் நல்ல வரவைப்பை பெற்று வருகிறது.

எனினும் கீர்த்தி சுரேஷ் நடித்த காட்சி டீசரில் இடம்பெறாதது, ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றம் என்றும் கூறலாம். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories