Asianet News TamilAsianet News Tamil

வரலாற்று மர்மம் நந்திவர்மன்...விஜய் சேதுபதி வெளியிட்ட டீசர் இதோ

பல்லவ வம்சத்தின் பிரபலமான பேரரசர் நந்திவர்மனின் வாழ்க்கை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளதாம்.

First Published Oct 14, 2022, 7:36 PM IST | Last Updated Oct 14, 2022, 7:43 PM IST

காவல்துறை உங்கள் நண்பன் என்னும் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சுரேஷ் ரவி, தற்போது புதிய சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் பெருமாள் வரதன் இயக்கியுள்ளார். பல்லவ வம்சத்தின் பிரபலமான பேரரசர் நந்திவர்மனின் வாழ்க்கை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளதாம்.

மேலும் செய்திகளுக்கு...வாரிசு படத்தில் காத்திருக்கும் மாஸ்...கெத்துக்காட்டும் நடன இயக்குனர் ஜானி

இது ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான மர்ம கதையை அவிழ்கிறது எனவும் கூறப்படுகிறது. கதாநாயகியாக ஆஷா கவுடா இவர்களுடன் நிழல்கள் ரவி, போஸ் வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளார். அருண்குமாரின் ஏகே பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் டீசரை ட்விட்டர் பக்கத்தில்  விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

Video Top Stories