நான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனம்..! வீடியோ

நான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனம்..! வீடியோ 

First Published Feb 15, 2020, 5:22 PM IST | Last Updated Feb 15, 2020, 5:22 PM IST

ஹீரோ ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு ஒரு வித்தியாசமான பிரச்சனை. அதாவது பதட்டமானாலும் சரி, கவலையாக இருந்தாலும் சரி சிரித்துவிடுவார். இதனாலேயே அவர் வாழ்க்கையில்பிரச்சனை. ஜாலியான ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு ஐஸ்வர்யா மேனன் ஒரு காதலி.

ஆதி படத்தில் எப்பொழுதும் ஒரு நண்பர்கள் கும்பல் இருக்கும். இந்த படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அந்த நண்பர்கள் கும்பலில் ஒருவர் காணாமல் போக அவரை தேடிச் செல்லும் ஆதி அங்கு நடக்கும் கேங் சண்டையில் சிக்கிக் கொள்கிறார். ஆதி சிரித்து சிரித்து பிரச்சனையில் சிக்குவது தான் கதையே.

ஆதி தான் சிரித்துக் கொண்டே இருக்கிறார். அவரை பார்த்து நமக்கு சிரிப்பு அவ்வளவாக வரவில்லை.காமெடி காட்சிகளில் கூட சிரிப்பு வரவில்லை. 

அப்பா, மகன் இடையே கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது. ஆனால் அது பெரிதாக கை கொடுக்கவில்லை. ஹீரோயின் டம்மி பீஸ். பாடல்கள் இருக்க வேண்டுமே என்று திணிக்கப்பட்டுள்ளது. யோகி பாபு வரும் காட்சிகள் பரவாயில்லை.

 

Video Top Stories