என்ன கங்குவா வராரு? மீண்டும் ஆட்டத்தை ஆரமிக்கும் கார்த்தி - நலனின் "வா வாத்தியார்" டீசர் இதோ!

Vaa Vaathiyaar Teaser : நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி தனது அடுத்த பட பணிகளை துவங்கியுள்ளார். வா வாத்தியார் என்ற அப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Share this Video

"சூது கவ்வும்" மற்றும் "காதலும் கடந்து போகும்" போன்ற நல்ல பல ஜெனரஞ்சகமான திரைப்படங்களை இயக்கி தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இயக்குனர் தான் நலன் குமாரசாமி. தற்பொழுது நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் "வா வாத்தியார்" திரைப்படத்தை அவர் இயக்கியிருக்கிறார். "மெய்யழகன்" திரைப்படத்தின் மெகா ஹிட் வெற்றிக்கு பிறகு, தன்னுடைய அடுத்த பட பயணத்தை கார்த்தி தொடங்கி இருக்கிறார். இப்போது "வா வாத்தியார்" படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் சத்யராஜ், ஆனந்தராஜ் நடிகை கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

Related Video