உண்மை ஜெயிக்க லேட்டாகும்... ஆனா கண்டிப்பா ஜெயிக்கும்! நாகசைதன்யா மிரட்டும் 'கஸ்டடி' பட ட்ரைலர் வெளியானது!

வெங்கட் பிரபு இயக்கத்தில், நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ள 'கஸ்டடி' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published May 5, 2023, 5:03 PM IST | Last Updated May 5, 2023, 5:03 PM IST

இயக்குனர் வெங்கட், பிரபு மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கியுள்ள திரைப்படம் கஸ்டடி. இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார், பிரபல தெலுங்கு நடிகரும்...  நடிகை சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யா.

இதுவரை நாக சைதன்யா நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக்கி இருக்கும் இந்த படம், மே 12ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பட குழுவினர் தீவிரமாக இறங்கி உள்ளனர். அந்த வகையில், தற்போது இப்படத்தில் இசை வெளியீட்டு விழா, மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா, மிக பிரம்மாண்டமாக நடந்து வரும் நிலையில், சற்று முன் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நாக சைதன்யா போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரவிந்த்சாமி வில்லனாக மிரட்டியுள்ளார். ப்ரியாமணி அரசியல்வாதியாக நடித்துள்ளார். மேலும் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக, நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மிகவும் பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர், படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. அதே போல் நாக சைதன்யா பேசும் வசனங்களான,  ஒரு முறை உண்மையின் பக்கம் நின்று பாரு மற்றும் உண்மை லேட்டா தான் ஜெயிக்கும் ஆனா கண்டிப்பா ஜெயிக்கும் போன்ற வசனங்கள் படு மாஸாக உள்ளது. 

Video Top Stories