நாக சைதன்யாவின் ‘புஜ்ஜி குட்டி’யாக மாறிய சாய் பல்லவி - வைரலாகும் தண்டேல் பட பாடல்
நாக சைதன்யா ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள தண்டேல் படத்தில் இருந்து புஜ்ஜிக் குட்டி பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தண்டேல். இப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் அவரது இசையில் ஜாவத் அலி பாடிய புஜ்ஜிக் குட்டி என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.
புஜ்ஜிக் குட்டி பாடல் வரிகளை விவேகா எழுதி உள்ளார். தண்டேல் திரைப்படத்தை சந்தூ மாண்டேட்டி இயக்கி இருக்கிறார். இப்படத்தை Bunny வாஸ் தயாரித்துள்ளார். நவின் நூலி படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ள இப்படத்திற்கு ஷாம்தத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் நாக சைதன்யா மீனவனாக நடித்துள்ளார். கடல் சார்ந்த காதல் கதையாக இந்த தண்டேல் படம் உருவாகி இருக்கிறது.