பல கெட்டப்பில் காமெடியில் தெறிக்கவிடும் வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'..! ட்ரைலர் வெளியானது..!

வைகை புயல் வடிவேலு முழுக்க முழுக்க காமெடியை மையமாக கொண்டு இயக்குனர் சுராஜ் இயக்கியுள்ள 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில், நீண்ட இடைவெளிக்கு பின்னர்  ஹீரோவாக நடித்துள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
 

Share this Video

டிசம்பர் 9 ஆம் தேதி, வடிவேலு நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகும் இந்த படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது படு தூளாக நடந்து வருகிறது. மேலும் 'நாய் சேகர்' ரிட்டர்ன்ஸ் படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான அப்பத்தா பாடல் மற்றும் பணக்காரன் பாடல் ஆகியவற்றிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவருடன் இணைந்து இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலமான ஷிவானி, குக் வித் கோமாளி சிவாங்கி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். நீண்ட நாட்களாக வடிவேலுவின் புதிய காமெடியை பார்த்து ரசிக்காமல் இருக்கும் ரசிகர்களுக்கு காமெடி விருந்து படைக்க வரும் வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது

Related Video