முத்துவேல் பாண்டியனாக கெத்து காட்டும் ரஜினிகாந்த் - பிறந்தநாள் பரிசாக வெளியானது ‘ஜெயிலர்’ கிளிம்ப்ஸ் வீடியோ

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் மாஸ் ஆன கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

Share this Video

ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ஜெயிலர். ரஜினி நடித்த எந்திரன், பேட்ட, தர்பார், அண்ணாத்த போன்ற படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நடிகர் ரஜினியின் பிறந்தநாளான இன்று, ஜெயிலர் படக்குழு அப்படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. முத்துவேல் பாண்டியனாக நடித்துள்ள ரஜினியின் மாஸான காட்சிகளும், அனிருத்தின் தெறிக்கவிடும் பின்னணி இசை உடன் கூடிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Related Video