Money In The Bank : பாலைவன மணலில் மாஸாக ஒரு பாடல்.. மிரட்டும் யுவனின் Independent Music Album - வைரல் வீடியோ!

Yuvan Shankar Raja : தமிழ் சினிமா உலகத்தில் இசை ஞானியாக திகழும் இளையராஜாவின் மகன் தான் இளம் இசைஞானி யுவன் சங்கர் ராஜா. இவருடைய குரலுக்கும் இசைக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு.

First Published May 5, 2024, 10:50 PM IST | Last Updated May 5, 2024, 10:50 PM IST

தனது 18வது வயது முதல் இசை அமைப்பாளராக தமிழ் திரையுலகில் கடந்த 27 ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக பயணித்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இவருடைய இசைக்கும் சரி, இவருடைய குரலுக்கும் சரி மயங்காத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிகவும் நேர்த்தியான ஒரு இசையமைப்பாளர். 

தனது தந்தை இசைஞானி இளையராஜாவிற்கு இணையான புகழோடு தமிழ் சினிமா உலகில் வளம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய இசைக்காகவே பல நாள் ஓடிய திரைப்படங்களும் உண்டு. வருடத்திற்கு குறைந்தது 10 திரைப்படங்களாவது இவருடைய இசையில் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022 ஆம் ஆண்டு இவருடைய இசையில் 11 திரைப்படங்கள் வெளியான நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு யுவன் இசையில் ஐந்து திரைப்படங்கள் வெளியானது. 

இறுதியாக இவ்வாண்டு துவக்கத்தில் வெளியான "பொன் ஒன்று கண்டேன்" என்கின்ற திரைப்படத்திற்கு இவர் இசையமைத்திருந்தார். இது மட்டுமல்லாமல் தமிழில் தளபதி விஜயின் "The Greatest of All Time" திரைப்படம் உள்பட 7 திரைப்படங்களுக்கு தற்பொழுது அவர் இசையமைத்து வருகிறார். 

இந்த சூழ்நிலையில் யுவன் குரல் மற்றும் இசையில் "Money In The Bank " என்கின்ற ஒரு இன்டிபென்டன்ட் மியூசிக் ஆல்பம் தற்பொழுது வெளியாகி உள்ளது. இன்று வெளியான அந்த மியூசிக் ஆல்பம் யூடியுப் தளத்தில் பல சாதனைகளை புரிந்து வருகிறது.

Video Top Stories