பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாணி ஜெயராமின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

First Published Feb 5, 2023, 1:34 PM IST | Last Updated Feb 5, 2023, 1:34 PM IST

மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாணி ஜெயராமின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியபோது அமைச்சர் மா.சுப்ரமணியனும் உடன் இருந்தார்.

இதையடுத்து பாடகி வாணி ஜெயராமின் உடலை காவல்துறை மரியாதை உடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று டிஜிபிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பாடகி வாணி ஜெயராம் நேற்று தனது இல்லத்தில் இறந்த நிலையில் கிடந்தார். தலையில் காயத்துடன் அவர் இறந்து கிடந்ததால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதி, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

இறுதியில் அவர் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது பிரேத பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதையடுத்து அவரது மரணத்தில் சந்தேகமில்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். 

Video Top Stories