'மிஷன் சாப்டர் 1' படத்தில் இருந்து வெளியான அச்சமே அச்சமே லிரிக்கள் பாடல்! வைரலாகும் வீடியோ.!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மிஷன் சேப்டர் 1' படத்தில் இருந்து அச்சமே அச்சமே என்கிற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், அருண் விஜய் நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படம் 'மிஷன் சாப்டர் '. தன்னுடைய மகளுக்காக போராடும் ஒரு தந்தையை பற்றிய இந்த படம், யாரும் எதிர்பாராத அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் எந்த வித டூப்பும் போடாமல், பல அடிகள்... வலிகளை தாங்கி கொண்டு நடித்துள்ளார் அருண் விஜய்.

அருண் விஜய்க்கு நிகராக ஆக்ஷன் காட்சியில் மிரட்டியுள்ளார், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள எமி ஜாக்சன். மேலும் இந்த படத்தில் நிமிஷா சஜயன், அபி ஹாசன், பேபி லயல் போன்ற பலர் நடித்துள்ளனர். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தில் இருந்து, இரண்டாவது சிங்கிள் பாடலான, 'அச்சமே அச்சமே' என்கிற பாடலின் லிரிக்கல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Related Video