மக்கள் செல்வனின் இடத்தில் இப்போ சிவா; வெளியானது சூது கவ்வும் 2 அப்டேட்!

Soodhu Kavvum 2 : மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள சூது கவ்வும் படத்தின் 2ம் பாக வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

Share this Video

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படம் தான் "சூது கவ்வும்". நலன் குமாரசாமி அந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் சுமார் 11 ஆண்டுகள் கழித்து அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இந்த படத்தை எஸ்.ஜே அர்ஜுன் இயக்க, சிவி குமார் தயாரிப்பில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் மிர்ச்சி சிவா இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ள நிலையில், வருகின்ற டிசம்பர் 13ஆம் தேதி இந்த திரைப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது. இப்பொது அப்படம் குறித்த புரோமோ ஒன்று இப்போது வெளியாகி உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video