Watch : கழகத் தலைவன் திரைப்படம் குறித்து முதல்வருக்கே ரிவியூ சொன்ன அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் முதல் நாளில் நான் திரைப்படத்தை பார்த்தேன். ரொம்ப நல்லவந்திருக்கிறது. சில திரைப்படங்களில் பாடல் வரும்போது பெண்கள். உட்பட பலர் எழுந்து சென்று விடுவார்கள். ஆனால், இந்த படத்தை அனைவரும் அமைதியாக இருந்து ரசித்தனர் என்று அமைச்சர் கருத்து தெரிவிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கலகத் தலைவன் திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு, ப்ரீவியூ தியேட்டரில் பார்த்த முதல்வர் ஸ்டாலின் சமுதாய அக்கறையுடன் ஏற்கப்பட்ட திரைப்படம் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வர் மு க ஸ்டாலின் அமைச்சர் மா சுப்பிரமணியுடன் நடை பயிற்சி மேற்கொண்டபோது, கலகத் தலைவன் திரைப்படத்தை பார்த்தீர்களா எப்படி உள்ளது என்று ரெவியூ கேட்டார். அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் முதல் நாளில் நான் திரைப்படத்தை பார்த்தேன். ரொம்ப நல்லவந்திருக்கிறது. சில திரைப்படங்களில் பாடல் வரும்போது பெண்கள். உட்பட பலர் எழுந்து சென்று விடுவார்கள். ஆனால், இந்த படத்தை அனைவரும் அமைதியாக இருந்து ரசித்தனர் என்று அமைச்சர் கருத்து தெரிவிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது