நகை கொள்ளையர்களின் உண்மை பின்னணியில் உருவான 'ராபர்' - ட்ரைலர் வெளியானது!

'மெட்ரோ' சத்யா நாயகனாக நடிக்கும் 'ராபர்' படத்தின் டிரெய்லரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
 

manimegalai a  | Published: Feb 19, 2025, 5:58 PM IST

நாளுக்கு நாள் அதிகரித்து வரும், நகை கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் 'ராபர்'. இது சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு 'மெட்ரோ 'திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்

இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர்.  இவர்களுடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Read More...

Video Top Stories