Asianet News TamilAsianet News Tamil

கார்த்தியின் 'மெய்யழகன்' படத்தில் கமல் பாடிய யாரோ இவன் யாரோ லிரிக்கல் பாடல் வெளியானது!

நடிகர் கார்த்தி, விருமன் படத்தை தொடர்ந்து அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிக்கும் 'மெய்யழகன்' படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published Sep 1, 2024, 7:39 PM IST | Last Updated Sep 1, 2024, 7:39 PM IST

கார்த்தியின் 27-ஆவது படமாக உருவாகி வரும் 'மெய்யழகன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை நடிகர் கார்த்தியின் உடன் பிறந்த அண்ணனும் நடிகருமான சூர்யா பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து அரவிந்த் சாமியும் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார்.

96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கும் இந்த படத்தில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை ஸ்ரீதிவ்யாவும் நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் பாடியுள்ள யாரோ இவன் யாரோ என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.