முதன்முறையாக ஜிவி பிரகாஷ் இசையில் டி.ஆர் பாடிய செம்ம குத்து சாங்... வெளியானது மார்க் ஆண்டனி பர்ஸ்ட் சிங்கிள்

ஜிவி பிரகாஷ் இசையில் மார்க் ஆண்டனி படத்திற்காக டி.ராஜேந்தர் பாடியுள்ள அதிருதா பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.

First Published Jul 16, 2023, 9:06 AM IST | Last Updated Jul 16, 2023, 9:06 AM IST

விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி. எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ள இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்தி மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்துள்ளார். இதில் சுனில், செல்வராகவன், அபிநயா, ரித்து வர்மா, ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. டைம் டிராவலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் பேண்டஸி திரைப்படமான இது வருகிற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. தற்போது இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டு உள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்பாடலை டி.ராஜேந்தர் பாடி இருக்கிறார். இப்பாடல் வரிகளை பிக்பாஸ் பிரபலம் அசல் கோளார் எழுதி உள்ளார். அதிருதா என தொடங்கும் இப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி தற்போது யூடியூப்பில் டிரெண்டாகி வருகிறது.

Video Top Stories