குறட்டையால் அவதிப்படும் நாயகனை பற்றிய படம் 'குட் நைட்'..! ட்ரைலர் வெளியானது..!

'ஜெய் பீம்' பட நாயகன் மணிகண்டன் நடித்துள்ள 'குட் நைட்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
 

Share this Video

குறட்டையால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி மிகவும் காமெடியாகவும், எமோஷனலாகவும் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 'குட் நைட்'. இந்த படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேத்தா ரகுநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களின் சார்பில், நஜிரத் பசிலியன், மகேஷ் ராஜ் பசிலியன், யுவராஜ் கணேசன் ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். சீன் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு, ஜெயந்த் சேது மாதவன் ஒலிப்பதிவு செய்துள்ளார். விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். வித்தியாசமான கதை அம்சத்தில் உருவாக்கியுள்ள இந்து திரைப்படம் மே 12 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேப்பை பெற்று வருகிறது.

Related Video