பொன்னியின் செல்வன் நாவலில் இப்படி ஒரு சீனே இல்லையே... ஒரே ப்ரோமோவில் ரசிகர்களை குழப்பிவிட்ட மணிரத்னம்
Ponniyin selvan : பொன்னியின் செல்வன் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள புரோமோவில் ஆதித்த கரிகாலன் விக்ரம், அருண்மொழி வர்மன் ஜெயம் ரவி, வந்தியத்தேவன் கார்த்தி ஆகிய மூவரும் ஒன்றாக குதிரையில் வரும்படியான காட்சி இடம்பெற்றுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து தான் இப்படத்தை எடுத்துள்ளார் மணிரத்னம் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கையில், நாவலின் கதைப்படி ஆதித்த கரிகாலன், அருண்மொழி வர்மன், வந்தியத்தேவன் ஆகிய மூவரும் ஒன்றாக சந்தித்துக் கொள்ளும்படியான காட்சியே இருக்காது.
ஆனால் பொன்னியின் செல்வன் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள புரோமோவில் ஆதித்த கரிகாலன் விக்ரம், அருண்மொழி வர்மன் ஜெயம் ரவி, வந்தியத்தேவன் கார்த்தி ஆகிய மூவரும் ஒன்றாக குதிரையில் வரும்படியான காட்சி இடம்பெற்றுள்ளதைப் பார்த்து பலரும் குழம்பிப்போய் உள்ளனர். இது மணிரத்னம் வைத்த டுவிஸ்டாக இது இருக்கலாம் என சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருசிலரோ இது படத்தின் புரமோஷனுக்காக எடுக்கப்பட்ட காட்சி என்று கூறுகின்றனர். படம் ரிலீசானால் தான் இவற்றுள் எது உண்மை என்பது தெரியவரும்.
இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா ராய்யின் மகள் ஆராத்யாவுக்கு 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய வாய்ப்பு கொடுத்த மணிரத்தினம்!