Raasa Kannu: ஏ.ஆர்.ரகுமான் இசையில்... வடிவேலு பாடிய 'ராசா கண்ணு' லிரிக்கல் பாடல் வெளியானது! - வீடியோ

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள மாமன்னன் படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வைகைப்புயல் வடிவேலு பாடியுள்ள 'ராசா கண்ணு' பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
 

First Published May 19, 2023, 5:32 PM IST | Last Updated May 19, 2023, 5:32 PM IST

இயக்குனர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், கர்ணன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கி, இரண்டே படத்தில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இதை தொடர்ந்து தற்போது, வழக்கம் போல் தன்னுடைய பாணியில் , உதயநிதி ஸ்டாலினை வைத்து இவர் இயக்கி முடித்துள்ள திரைப்படம், 'மாமன்னன்'. 

கீர்த்தி சுரேஷ் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்தில், வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுவரை வெளியான போஸ்டரைகளை வைத்து பார்க்கும் போது, வடிவேலு அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இப்படத்தில் காமெடி ட்ராக்கில் இருந்து விலகி, இதுவரை திரையில் பார்த்திடாத புது வடிவேலுவை இப்படத்தில் பார்க்க முடியும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதே போல் வில்லனாக மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கிறார்.

ஜூன் மாதம் இப்படம் வெளியாக உள்ள நிலையில், தற்போது இந்த படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வடிவேலு முதல் முறையாக பாடியுள்ள 'ராசா கண்ணு' என்கிற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதுவரை எத்தனையோ பாடல் வடிவேலு பாடி இருந்தாலும், இசை பயல் இசையில் பாடியுள்ளது தனி ரகமாகவே பார்க்கப்படுகிறது. மனதை உருக்கும் வரிகளில், மக்களின் கஷ்டங்களை எதிரொலிக்கிறது இந்த பாடல்.

Video Top Stories