‘மாவீரன்’ சிவகார்த்திகேயனுடன் ஷங்கர் மகள் அதிதி பாடிய ‘வண்ணாரப்பேட்டையில’ பாடல் ரிலீஸ் ஆனது - வீடியோ இதோ

மடோன் அஸ்வின் இயக்கிய மாவீரன் படத்துக்காக அதிதி ஷங்கர் உடன் சிவகார்த்திகேயன் இணைந்து பாடிய வண்ணாரப்பேட்டையில பாடல் ரிலீஸ் ஆகி உள்ளது.

Share this Video

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் மாவீரன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஜூலை மாதம் 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. 

மாவீரன் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது மாவீரன் படத்தின் 2-வது சிங்கிள் டிராக் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. டூயட் பாடலான இதை நடிகை அதிதி ஷங்கரும், நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்து பாடி உள்ளனர்.

வண்ணாரப்பேட்டையில என தொடங்கும் இப்பாடலுக்கு பரத் சங்கர் இசையமைத்து உள்ளார். இப்பாடல் வரிகளை யுகபாரதி எழுதி உள்ளார். சிவகார்த்திகேயனும் அதிதியும் போட்டி போட்டு பாட்டு பாடும் காட்சிகள் அடங்கிய இப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி யூடியூப்பில் செம்ம வைரலாகி வருகிறது.

Vannarapettayila - Lyrical Video | Maaveeran | Sivakarthikeyan, Aditi Shankar | Bharath Sankar

Related Video