
Maaveeran Press Meet
இதுவரை சிவகார்த்திகேயனின் எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரவேற்பு மாவீரன் திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. யோகி பாபுவின் மண்டேலா திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
ஜூலை 14ம் தேதி மாவீரன் திரைப்படம் உலகெங்கிலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது. இதற்கான பிரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் படக்குழுவினர். தற்பொழுது சென்னையில் நடைபெற்ற பிரஸ் மீட் புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது. பான் இந்தியா ஸ்டாராக மாறிவரும் சிவகார்த்திகேயனுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.