ஓசூரில் முதன்முறையாக நடைப்பெற்ற மார்கழியில் மக்களிசை, திரளான ரசிகர்கள் பங்கேற்பு
ஓசூரில் நடத்தப்பட்ட மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் திரளான ரசிகர்கள் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர் இயக்குநர் பா. ரஞ்சித். இவர் தற்போது நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி வருகிறார். இயக்குநர் பா.ரஞ்சித், நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதேபோல் நீலம் பண்பாட்டு மையம் என்ற பெயரில் பண்பாட்டு நிகழ்வுகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறார்.
அந்த வகையில் ஆண்டுதோறும் மார்கழியில் மக்களிசை என்ற பெயரில் பாரம்பரிய இசைக் கலைஞர்கள், நடன கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். இதையடுத்து 2023-ம் ஆண்டுக்கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார். அதன்படி கர்நாடாக மாநிலம் கோலாரில் அமைந்திருந்திருக்கும் கே.ஜி.எஃப் (கோலார் தங்க வயல்) நகராட்சி மைதானத்தில் டிசம்பர் 23-ம் தேதி தொடங்கியுள்ளார்.
இரண்டாவது நிகழ்வாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பல்வேறு பாரம்பரிய கலைஞர்கள் பங்கேற்கேற்று பொதுமக்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.. இதைத்தொடர்ந்து சென்னையில் வரும் 28 முதல் 30 வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.
ஒசூர் பகுதியில் வாழும் சிலரின் வட்டார மொழியிலான பாடல், பாரம்பரிய இசை ஆகியவை இசைக்கப்பட்டன.. முன்மொழி பேசக்கூடியவர்கள் உள்ள ஒசூரில் எதிர்ப்பார்த்ததை விட மக்களின் ஆதரவு இருந்ததாக ரஞ்சித் நெகிழ்ச்சி தெரிவித்தார்.