Asianet News TamilAsianet News Tamil

பள்ளிகள் உருவானது எப்படி? தீண்டாமை கொடுமை... பல விஷயங்களை கண் முன் நிறுத்தும் 'மா.பொ.சி' இன்ட்ரோ வீடியோ!

வெற்றிமாறன் தயாரிப்பில், நடிகர் போஸ் வெங்கட் இயக்க உள்ள 'மா.பொ.சி', படத்தின் இன்ரோ வீடீயோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 
 

சீரியல் நடிகராக அறியப்பட்டு, சமீப காலமாக பல திரைப்படங்களில் மிகவும் வலுவான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வரும், போஸ் வெங்கட்... "கன்னி மாடம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இப்படம் ஒரு சிறந்த இயக்குனர் என போஸ் வெங்கட்டுக்கு பெயர் வாங்கி கொடுத்ததோடு, விமர்சன ரீதியாக பாராட்ட பட்டாலும்... வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இதை தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் திரைப்பட இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். சமூக நோக்கத்துடன் எடுக்கப்பட உள்ள இந்த படத்திற்கு 'மா.பொ.சி' என பெயர் வைத்துள்ளனர்.இந்த படத்தின் நடிகர் விமல் ஹீரோவாக நடிக்க, இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில்... இப்படம் குறித்த இன்ட்ரோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Video Top Stories