விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்திலிருந்து கல்யாண கலவரம் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

பிரபல நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தில் இருந்து 'கல்யாண கலவரம்' என்கிற கலக்கலான சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ' லவ் மேரேஜ் ' . ஹீரோவாக விக்ரம் பிரபு நடிக்க, இவருக்கு ஜோடியாக நடிகை சுஷ்மிதா பட் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். 

மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் கவனிக்க , தயாரிப்பு வடிவமைப்பை எம். முரளி மேற்கொண்டிருக்கிறார். கிராமிய பின்னணியில் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஸ்யூர் பிலிம்ஸ் - ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள, 'கல்யாண கலவரம்' என்கிற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


Related Video