Fight Club: யார் செத்தாலும் இந்த சண்ட சாவது..! உறியடி விஜயகுமாரின் 'ஃபைட் கிளப்' படத்தின் டீசர் வெளியானது!

லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஜி ஸ்குவார்ட் நிறுவனம் சார்பில் வெளியிட உள்ள முதல் படமான, 'ஃபையிட் கிளப்' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

இயக்குனரும், நடிகருமான உறியடி விஜய் குமார் ‘ஃபைட் கிளப்’ படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், ஒரு சில பிரச்சனைகளால் இப்படம் ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் கடந்த வாரம் வெளியானது. ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா தயாரித்துள்ள இப்படத்தை திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார், அவர் சமீபத்தில் தனது ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்ததை தொடர்ந்து இப்படம் குறித்த தகவலையும் வெளியிட்டார். இயக்குனர் அப்பாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதைதொடர்ந்து இப்படத்தின், டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எந்நேரமும் எல்லா காரணங்களுக்காகவும் அடித்து கொள்வது தான் இந்த படமே... என்பது டீசரை பார்க்கும் போது தெரிகிறது. 

Related Video