
திருமணத்தை மீறிய உறவால் கணவனை தேடும் பெண் – ஜென்டில்வுமன் படத்தின் டிரைலர் வெளியீடு!
Gentlewoman Trailer Released : லிஜோமோல் நடிப்பில் உருவாகி வரும் ஜென்டில்வுமன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது.
Gentlewoman Trailer Released : ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் லிஜூமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜென்டில்வுமன். முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய இந்தப் படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், திருமணத்தை மீறீய உறவையும் இந்தப் படம் சித்தரிக்கிறது. கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் முதல் லிரிக் வீடியோ சுளுந்தீ பாடல் லிரிக் வெளியானது. இந்த நிலையில் தற்போது டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.