watch : இடி தாக்கியதில் நூலிழையில் உயிர்தப்பிய ‘மார்கழி திங்கள்’ படக்குழு - வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ
பழனி அருகே கணக்கம்பட்டியில் மார்கழி திங்கள் பட ஷூட்டிங் நடந்தபோது இடி தாக்கியதில் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் உயிர்த்தப்பினர் என இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
மனோஜ் பாரதிராஜா, அப்புக்குட்டி, ரக்ஷனா மற்றும் பலர் நடிக்கும் மார்கழி திங்கள் படத்தினர் சுசீந்திரன் தயாரிக்கிறார். பாரதிராஜா மகன் மனோஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பழனி அருகே கணக்கம்பட்டி பகுதியில் நடைபெற்றது. மக்காச்சோள தோட்டத்தில் இயற்கை சூழலில் படப்பிடிப்பானது நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்த பிடிப்பிற்க்காக சென்னையிலிருந்து பிரம்மாண்ட குடை லைட்கள் வரவழைக்கப்பட்டன. படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்த போது சூறை காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யத் துவங்கியது. அந்த படப்பிடிப்பு தளத்தில் அமைக்கப்பட்ட லைட் செட் மீது இடி இடித்ததில் லைட் செட்கள் கீழே விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக ஐந்து லைட் மேன்கள் உயிர் தப்பினர் என இயக்குனர் சுசீந்திரன் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.