'LGM' படத்தில் இருந்து செகண்ட் சிங்கிள் பாடலான கிரில் சிக்கன் லிரிக்கல் பாடல் வெளியானது!

தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகியிருக்கும் 'எல் ஜி எம்' படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெட்ரா நிலையில், தற்போது இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
 

First Published Jul 11, 2023, 8:37 PM IST | Last Updated Jul 11, 2023, 8:37 PM IST

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான எம். எஸ். தோனியின் மனைவி சாக்ஷி தயாரிப்பில்... தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் தமிழ் படமாக உருவாகியுள்ளது 'எல் ஜி எம்'. ( லெட்ஸ் கெட் மேரீட்). இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விரைவில் இப்படம் ரிலீசாக உள்ள நிலையில், நேற்று மிகப்பிரமாண்டமாக இப்படத்தின் ட்ரைலர் வெளியானது.

ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் MS தோனி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிலையில் LGM படத்தில் இடம்பெற்றுள்ள, இரண்டாவது சிங்கிள் பாடலான கிரில் சிக்கன் என்கிற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

LGM திரைப்படத்தை, ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இவரை இசையும் அமைத்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Video Top Stories