தோனி தயாரிப்பில் உருவாகியுள்ள 'LGM' படத்திலிருந்து... இஸ் கிஸ் கிஃபா என்கிற லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது!

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி சிங் தோனி, தயாரிப்பில் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகியுள்ள LGM படத்தில் இருந்து, இஸ் கிஸ் கிஃபா என்கிற பாடல் வெளியாகியுள்ளது.

First Published Jul 20, 2023, 8:07 PM IST | Last Updated Jul 20, 2023, 8:06 PM IST

ஜூலை 28ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாக உள்ள LGM படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

சாக்ஷி தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அடி எடுத்து வைத்திருக்கும் முதல் படத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ளார். இவானா கதாநாயகியாகவும் நடிகை, நதியா ஹரிஷ் கல்யாண் அம்மாவாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் அடுத்தடுத்து வெளியான இரண்டு சிங்கிள் பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அம்மா - காதலி இருவருக்கும் இடையே மாட்டிக் கொண்டு தவிக்கும் காதலன் பற்றிய வழக்கமான கதை இந்த படம் என்றாலும், காதலி தன்னுடைய அம்மாவை புரிந்து கொள்ள ட்ரிப் ஒன்றை ஏற்பாடு செய்ய... அதனால் ஏற்படும் பிரச்சனைகளை விறுவிறுப்பான காட்சிகளுடன் ரமேஷ் தமிழ்மணி காட்சிப்படுத்தி உள்ளார். தற்போது இந்த படத்தில் இருந்து இஸ் கிஸ் கிஃபா என்கிற பாடல் வெளியாகி உள்ளது. வித்யாசமான பாடல் வரிகளுடன், சாண்டியின் அசத்தலான ஆட்டத்தில் வெளியாகி இந்த பாடல் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
 

Video Top Stories