Watch: 2000 நடன கலைஞர்களுடன் தளபதியின் தரமான சம்பவம்! வெளியான 'நா ரெடி' ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்! வீடியோ

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தில் இருந்து, அவரின் பிறந்தநாளை முன்னிட்டு 'நா ரெடி' ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published Jun 22, 2023, 6:33 PM IST | Last Updated Jun 22, 2023, 6:33 PM IST

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் 'லியோ'. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து, தளபதி பிறந்தநாளை முன்னிட்டு, அனிருத் இசையில் அவர் பாடி... 2000 நடன கலைஞர்களுடன் நடனம் ஆடி இருக்கும், 'நா ரெடி' பாடல் வெளியாகி உள்ளது.

அனிருத்தின் பட்டையை கிளப்பும் ம்யூசிக்கில் வெளியாகியுள்ள இந்த பாடலுக்கு, அசல் கோலார் ராப் வரிகள் வலிமை சேர்த்துள்ளது என கூறலாம். குறிப்பாக விஜய்யின் குரல் 'நா ரெடி' பாடலுக்கு பக்காவாக செட் ஆகியுள்ளது.  இந்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியான தகவலையே தாறுமாறாக ட்ரெண்டாக்கிய ரசிகர்கள் பாடலையும் வைரலாக்க துவங்கி விட்டனர்.
 

Video Top Stories