விஜய்யின் நண்பன் இயக்கிய ‘லெக் பீஸ்’ படத்தின் கலகலப்பான டிரைலர்

நடிகர் விஜய்யின் நண்பன் ஸ்ரீநாத் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகி உள்ள லெக் பீஸ் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது.

Share this Video

யோகி பாபு நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் லெக் பீஸ். இப்படத்தை நடிகர் விஜய்யின் நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத் இயக்கி இருக்கிறார். அவர் இயக்கிய 3வது படம் இதுவாகும். நகைச்சுவை கதையம்சம் கொண்ட இப்படத்தை ஹீரோ சினிமாஸ் சார்பில் மணிகண்டன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு பிஜார்ன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கலகலப்பான டிரைலர் யூடியூப்பில் ரிலீஸ் ஆகி வைரலாகி வருகிறது.

லெக் பீஸ் திரைப்படத்தில் விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், ரமேஷ் திலக், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, சாம்ஸ், ஸ்ரீநாத், மணிகண்டன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் வருகிற மார்ச் 7ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கு மாசாணி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ஷண்முகப்பிரியன் மற்றும் சத்ய மோகன் மேற்கொண்டுள்ளனர்.

Related Video