Live

 நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். 

Share this Video

நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். செப்சிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் சரத்பாபு, கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபுவின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடலுக்கு ரஜினி, கமல் உளிட்ட அனைத்து திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு மற்றும் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. 

Related Video