அடுத்தவங்க வலியும்... வேதனையும் எரிச்சலா போச்சா? அம்மாச்சியாக மாறி கலங்க வைக்கும் கோவை சரளாவின் 'செம்பி' ட்ரைல

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா நடித்துள்ள 'செம்பி' படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

இயற்கை அழகை தன்னுடைய படங்களில் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ள, இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின், தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'செம்பி'.

இந்த படத்தின் முதல் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்... தற்போது இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது. மலைக்காட்டில் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் பாட்டி மற்றும் பேத்தியின் வாழ்க்கை, சில அரசியல்வாதிகளால் எப்படி சூறையாடப்படுகிறது. வாழ்வாதாரத்தை இழந்த மூதாட்டியான கோவை சரளா, எப்படி தன் பேத்தியை இந்த பிரச்சனையில் இருந்து மீட்டு... பிரச்சனை குறித்து சமாளிக்க எப்படி போராடுகிறார் என்பதே இந்த படத்தின் கதை என்பது ட்ரைலரை பார்க்கும் போது தெரிகிறது. 

மேலும் குக் வித் கோமாளி அஷ்வினுக்கு இது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக இருக்கும் என தெரிகிறது. கோவை சரளா கதையின் நாயகியாக நடித்துள்ள 'செம்பி' படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகி பார்பவர்களையே கலங்க வைத்துள்ளது. இப்படம் இம்மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ளதாக இந்த ட்ரைலரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரைலரை நடிகர் தனுஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிபிடித்தக்கது.

Related Video