Koose Munisamy Veerappan: ‘கூச முனிசாமி வீரப்பன்’ தமிழ் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸின் டிரெய்லரை வெளியானது!

'கூச முனிசாமி வீரப்பன்' இந்தியாவின் மிகப்பிரபல வனக் கொள்ளைக்காரன்  வீரப்பனின்  வாழ்க்கையையும் அவரது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும்  ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
 

Share this Video

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸின் டிரெய்லரை இன்று வெளியிட்டது. 

இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூச முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை வழங்குகிறது. நிஜ வாழ்க்கைக் காட்சிகள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த சீரிஸ் வீரப்பனின் புதிரான ஆளுமை மற்றும் அவரது குற்ற பின்னணியைத் தெளிவாகச் சித்தரிக்கிறது. இந்த சீரிஸின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில், அவரது முழு வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறது. அது மட்டுமல்லாது அவரைச் சுற்றி நடந்த பல நிகழ்வுகள் பற்றிய அறியப்படாத உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ஒரிஜினல் தமிழ் சீரிஸான ​​'கூச முனிசாமி வீரப்பன்' டிசம்பர் 8 முதல் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

மூன்று தசாப்தங்களாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளை வேட்டையாடிய மிகப்பிரபலமான நபரான வீரப்பன், சிறப்பு அதிரடிப்படையின் (STF) வியத்தகு என்கவுண்டரில் தனது முடிவைச் சந்தித்தார். வரலாறாக மாறிய அவரது வாழ்க்கைகதை காவல்துறை ஆவணங்களின் ஒரு பகுதியாக உள்ளது. வரவிருக்கும் ZEE5 தமிழ் ஒரிஜினல் சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ என்பது வீரப்பனால் அவரது வார்த்தைகளில் விவரிக்கப்படும் ஒரு தனித்துவமான ஆவணம் ஆகும். இந்த சீரிஸ் அவர் வாழ்வின் மீது ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது. இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Related Video