Asianet News TamilAsianet News Tamil

அல்டிமேட் லவ் அட்ராசிட்டி... 'கோமாளி' பட இயக்குனர் இயக்கி நடித்திருக்கும் 'லவ் டுடே' ட்ரைலர் வேற லெவல்..!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள புதிய திரைப்படமான ‘லவ் டுடே’வின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் (எஸ் டி ஆர்) இன்று வெளியிட்டார். கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம்  நவம்பர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
 

First Published Oct 5, 2022, 11:05 PM IST | Last Updated Oct 5, 2022, 11:05 PM IST

'லவ் டுடே' திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தியும், நிர்வாக தயாரிப்பாளராக எஸ் எம் வெங்கட் மாணிக்கமும் உள்ளனர். அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய நகைச்சுவை ததும்பும் பொழுதுபோக்கு படமாக ‘லவ் டுடே’ இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இதை மெய்ப்பிக்கும் வகையில் டிரைலரும் அமைந்துள்ளது.

இயக்குநர் பாலாவின் 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. 'லவ் டுடே' படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கலை வடிவமைப்பை எம்கேடி கையாண்டுள்ளார். 'லவ் டுடே' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

"இன்றைய காதல் மற்றும் 2கே தலைமுறையினர் எதிர்கொள்ளும் உறவு சிக்கல்களைப் பற்றி இப்படம் பேசும். மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்களோடு பார்வையாளர்களை ‘லவ் டுடே’ ஈர்க்கும்," என்று படக்குழு கூறுகிறது. 'லவ் டுடே' என்ற தலைப்பைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்த சூப்பர் குட் பிலிம்ஸின் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி மற்றும் 'தளபதி' விஜய் ஆகியோருக்கு தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ள 'லவ் டுடே' படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி திரைப்படம் வெற்றி படமாக அமைந்ததால், அவர் இயக்கி நடித்துள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை, நடிகர் சிம்பு இன்று வெளியிட்டுள்ளார். ட்ரைலருக்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories