தலைவா.. தலைவா.. என்ற ரசிகர்களின் கோஷம்.. கோவை ஏர்போட்டில் மாஸ் என்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார் - வைரல் வீடியோ!

ஜெயிலர் திரைப்பட வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது அடுத்த பட பணிகளை துவங்கவுள்ளார். இதற்கிடையில் கோவை அருகே உள்ள செந்தோட்டம் பகுதியில் நடந்த தனது குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அவர் கோவை சென்றுள்ளார்.

First Published Sep 17, 2023, 5:34 PM IST | Last Updated Sep 17, 2023, 5:34 PM IST

கோவை சூலூர் செந்தோட்டம் பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2வது மகளான சௌந்தர்யா மற்றும் விசாகனின் தம்பதியினரின் மகனுக்கு, பெயர் சூட்டுதல் மற்றும் காதணி விழா நடைபெறுகிறது. விசாகனின் குலதெய்வமான சூலூர் மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் கோவை சென்றுள்ளார், அப்போது அவர் விமான நிலையத்திற்கு வரும் செய்தி அறிந்த அவரது ரசிகர்கள், பெரும் திரளாக அங்கு கூடினர், மேலும் அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும், தலைவா.. தலைவா என்று கோஷங்களை எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். இறுதியில் ரசிகர்கள் அளித்த பரிசுகளை ஏற்றுக்கொண்டு, காரில் இருந்தபடியே அவர்களுக்கு கை அசைத்து, வணக்கம் கூறிவிட்டு அங்கிருந்து அவர் புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  

Video Top Stories