பழனியில் சுவாமி தரிசனம்.. வெள்ளி கடை முன்பு கூடிய ரசிகர் கூட்டம் - வைரலாகும் யோகி பாபுவின் வீடியோ!

பிரபல நடிகர் யோகி பாபு அவர்கள் சுவாமி தரிசனம் செய்ய பழனி முருகன் கோவிலுக்கு சென்றிருந்தபோது, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அவருடைய ரசிகர்கள் அங்கு குவிந்த வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Share this Video

சின்னத்திரையில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து அதன் பிறகு வெள்ளித்தறையில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நடித்து, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராகவும், சிறந்த குணசித்திர நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் யோகி பாபு அவர்கள்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு இன்று நடிகர் யோகி பாபு வருகை தந்தார். ரோப் கார் மூலமாக சென்ற அவர் முருகப்பெருமானை தரிசனம் செய்தார். பின்னர் போகர் சமாதியில் வழிபட்டு விட்டு பின்னர் மலை அடிவாரத்திற்கு வந்த நடிகர் யோகி பாபு , திரு ஆவினன்குடி கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார். 

பின்னர் அங்கு இருந்த வெள்ளி கடையில் அவருக்கு தேவையான பொருட்களை வாங்கினார். இதனை அறிந்து அப்பகுதியில் இருந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் புகைப்படம் எடுக்க சூழ்ந்து கொண்ட நிலையில் அவர்களுடன் செல்பி எடுத்து கொண்டனர்.

Related Video