அதை ஆணவத்தில் சொல்லல.. ஹீரோ ஆயிட்டேன் அதான்.. எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - லாரன்ஸ் வெளியிட்ட Video!

தமிழ் திரையுலகில் நடிகராகவும், நடன இயக்குனராகவும் திகழ்ந்து வரும் ராகவா லாரன்ஸுக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை. இந்நிலையில் அண்மையில் எழுந்த ஒரு சர்ச்சைக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு அதன் மூலம் பதில் அளித்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

Share this Video

ராகவா லாரன்ஸ் சிறு வயது முதலே பிறருக்கு உதவும் பெரிய குணத்தை கொண்டவர், சினிமாவில் குரூப் டான்சராக இருந்து, அதன் பிறகு டான்ஸ் மாஸ்டராக அவரது வாழ்க்கை தரம் உயர்ந்தபோது தன்னுடன் பல மாற்றுத்திறனாளி குழந்தைகளையும், இளைஞர்களையும் சேர்த்துக்கொண்டு அவர்களுக்கு உதவ துவங்கினர். 

அவர்களுக்கு உதவ அவ்வப்போது அவர் பொது மக்களிடையே நன்கொடைகள் கேட்டு பெற்றதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு "நான் செய்யும் சேவைகளுக்கு நீங்கள் பணம் தர வேண்டாம்" என்று அவர் போட்டிருந்த ஒரு பதிவு, பெரும் சர்ச்சையாக வெடித்தது. பணம் வந்துவிட்ட ஆணவத்தில் தான் ராகவா லாரன்ஸ் இப்படி பேசி வருகிறார் என்று பலரும் கூறிய நிலையில், தற்போது இந்த காணொளியை வெளியிட்டு அவை அனைத்திற்கும் பதில் அளித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

Related Video