பிக் பாஸ் சீசன் 8; 25வது நாளை கவினுடன் கேக் வெட்டி கொண்டாடிய போட்டியாளர்கள் - Viral Video!

Kavin in Bigg Boss பிரபல நடிகர் கவின் தன்னுடைய ப்ளடி பகர் திரைப்பட பிரமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று அங்கு உள்ளவர்களோடு உரையாடி இருக்கிறார்.

Ansgar R  | Published: Oct 31, 2024, 11:53 PM IST

இன்று அக்டோபர் 31ம் தேதி, வெகு விமர்சையாக தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயனின் "அமரன்", பிரபல நடிகர் ஜெயம் ரவியின் "பிரதர்", மலையாள திரை உலக நடிகர் துல்கர் சல்மானின் "லக்கி பாஸ்கர்" மற்றும் இளம் நாயகன் கவினின் "ப்ளடி பெக்கர்" ஆகிய நான்கு திரைப்படங்கள் தீபாவளி ஸ்பெஷல் திரைப்படங்களாக வெளியாகி இருக்கிறது. 

பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார், முதல் முறை தயாரிப்பாளராக களமிறங்கியுள்ள ப்ளடி பெக்கர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கும் கவின், பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று அங்கு உள்ளவர்களோடு உரையாடி மகிழ்ந்திருக்கிறார். 

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கவின் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று அக்டோபர் 30ம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி தனது 25வது நாளை எட்டிய நிலையில், உள்ளே உள்ள 15 போட்டியாளர்களோடு இணைந்து கேக் வெட்டி அந்த சந்தோஷத்தை கொண்டாடி இருக்கிறார் நடிகர் கவின்.

Read More...

Video Top Stories