கிருத்திகா உதயநிதியின் 'யார் இந்த பேய்கள்' நெஞ்சை உருக்கும் மியூசிக் ஆல்பம் வெளியானது!

இயக்குனரும், நடிகர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள 'யார் இந்த பேய்கள்' மியூசிக் ஆல்பம் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

First Published Feb 9, 2023, 8:11 PM IST | Last Updated Feb 9, 2023, 8:11 PM IST

குழந்தைகள் சொல்வதை, அவரின் பெற்றோர்கள்... மற்றும் ஆசிரியர்கள் தவித்து விடாமல் காது கொடுத்து கேட்கவேண்டும், அவர்களின் பிரச்னையை தீர்க்க உறுதுணையாக நாம் நிற்க வேண்டும் என்கிற கருத்தை மையமாக வைத்து, விழுப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த ம்யூசிக் ஆல்பம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், யுவன் ஷங்கர் ராஜா இப்பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை பா விஜய் எழுத, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். மிகவும் எளிமையாக அனைவரது மனதை கவரும் விதத்திலும், உணர்வு பூர்வமாகவும், நெஞ்சை உருக வைக்கும் விதத்திலும் இந்த மியூசிக் ஆல்பம் அமைந்துள்ளது.

Video Top Stories