ஜிவி பிரகாஷ் போட்ட மஜாவான பாட்டு; வைரலாகும் கிங்ஸ்டன் செகண்ட் சிங்கிள்
கிங்ஸ்டன் படத்திற்காக ஜிவி பிரகாஷ் குமார் இசையில் வெளியாகி உள்ள மண்ட பத்ரம் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் 25வது படம் கிங்ஸ்டன். இப்படத்தை கமல்பிரகாஷ் இயக்கி உள்ளார். இப்படத்தை ஜிவி பிரகாஷே தயாரித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, மண்ட பத்ரம் என்கிற கானா குத்து பாடலை செகண்ட் சிங்கிளாக வெளியிட்டுள்ளனர். இப்பாடலை கானா பிரான்சிஸ் பாடி இருக்கிறார். இதன் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது.
கிங்ஸ்டன் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் ஜோடியாக திவ்ய பாரதி நடித்துள்ளார். இருவரும் ஏற்கனவே பேச்சிலர் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். இப்படத்தில் கோகுல் பினோய் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.