கே.ஜி.எஃப் 2 ரிலீஸ் ஆன அதே நாளில்... மெர்சலான வீடியோ உடன் கே.ஜி.எஃப் 3 குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ரிலீஸ் ஆகி ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி மாஸான வீடியோ ஒன்றை வெளியிட்டு கேஜிஎஃப் 3 குறித்து ஹிண்ட் ஒன்றையும் படக்குழு கொடுத்துள்ளது.

First Published Apr 14, 2023, 6:09 PM IST | Last Updated Apr 14, 2023, 6:09 PM IST

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நாயகனாக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் கே.ஜி.எஃப். அப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசானதை அடுத்து அதன் இரண்டாம் பாகம் கடந்தாண்டு ஏப்ரல் 14-ந் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படம் உலகளவில் மாஸ் காட்டியதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் மழை பொழிந்தது. இப்படம் ரூ. 1200 கோடிக்கு மேல் வசூலித்து, கடந்தாண்டு ரிலீசான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படைத்தது.

கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக படக்குழு மாஸ் ஆன வீடியோவை வெளியிட்டு உள்ளது. அதில் ராக்கி பாய் 1978 முதல் 1981 வரை ராக்கி பாய் எங்கு இருந்தார் என்கிற கேள்வியை எழுப்பி கேஜிஎஃப் 3-ம் பாகத்திற்கான ஹிண்டையும் கொடுத்துள்ளனர். தற்போது கேஜிஎஃப் மூன்றாம் பாகத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் பிரசாந்த் நீல் பிசியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் விரைவில் கேஜிஎஃப் 3 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Video Top Stories