பேமிலியோடு திருப்பதிக்கு திடீர்விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்; துரத்தி துரத்தி செல்பி எடுத்த போலீஸ்- வீடியோ இதோ

நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தபோது எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.

Share this Video

பிரபல திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது சகோதரி ரேவதி சுரேஷ், அவரது தந்தை சுரேஷ், அவரது தாய் மேனகா சுரேஷ் ஆகியோர் இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டனர். சாமி கும்பிட்ட பின் அவர்கள் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாரங்களை பெற்று கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு வேத ஆசி வழங்கப்பட்டது.

பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய கீர்த்தி சுரேஷ், நீண்ட நாட்களுக்குப் பின் ஏழுமலையானை வழிபட்டது மனதுக்கு இதமாக உள்ளது. என்னுடைய சகோதரி ரேவதி சுரேஷின் குறும்படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. போலோ சங்கர் திரைப்படத்தில் நடித்து வருகிறேன் என்று கூறினார்.

கோவிலுக்கு வெளியே அவருடன் ரசிகர்கள் போட்டி போட்டு செல்பி எடுத்து கொண்டனர். குறிப்பாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஒருவர் கீர்த்தி சுரேஷை துரத்தி துரத்தி செல்பி எடுத்தார். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்ட காரணத்தால் தேவஸ்தான ஊழியர்கள் அவரை பேட்டரி காரில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். 

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது மாமன்னன் திரைப்படம் உருவாகி உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற ஜூன் மாத இறுதியில் இப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. 

Related Video