Watch : புழுதி பறக்க தர லோக்கல் டான்ஸ் ஆடிய நானி... வைரலாகும் தசரா படத்தின் ‘தூம் தாம் கூத்து’ பாடல் வீடியோ

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் தசரா படத்தின் தூம் தாம் கூத்து பாடலின் வீடியோ ரிலீஸ் ஆகி உள்ளது.

Share this Video

தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவாகி இருக்கும் பான் இந்தியா திரைப்படம் தசரா. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி உள்ள இப்படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரிலீஸ் ஆகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகின்றன.

இந்நிலையில், தசரா படத்தின் தூம் தாம் கூத்து என்கிற பாடலின் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டு உள்ளது. மும்பையில் நடைபெற்ற விழாவில் கீர்த்தி சுரேஷ், நானி மற்றும் ராணா ஆகியோர் கலந்துகொண்டு இந்த பாடலை ரிலீஸ் செய்தனர். 

இந்த பாடலுக்கு புழுதி பறக்க மரண மாஸ் டான்ஸ் ஆடி உள்ளார் நடிகர் நானி. அவரின் நடன அசைவுகள் பார்த்த உடனே கவரும் வகையில் உள்ளதால், இனி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களிக் தூம் தாம் கூத்து ஸ்டெப்புகள் டிரெண்டாகும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Related Video