
அஃகேனம் படத்தின் மெல்லாலி மெல்லாலி லிரிக் வீடியோ வெளியீடு!
கீர்த்தி பாண்டியன் மற்றும் அருண் பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் மெல்லாலி மெல்லாலி பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியிருக்கிறது.
இயக்குநர் உதய் கே இயக்கத்தில் உருவாகி வரும் அஃகேனம் படத்தின் முதல் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியிருக்கிறது. அன்பிற்கினியாள் படத்திற்கு பிறகு அருண் பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் இணைந்து இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். மேலும், பிரவீன் ராஜா, ரமேஷ் திலக் ஆகியோரும் நடிக்கின்றனர். அருண் பாண்டியன் தான் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்துள்ளார். பாண்டிச்சேரி மற்றும் வட இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. வித்தியாசமான அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும் என்று படக்குழு நம்பிக்கையோடு கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.