Star Movie Making Song Out: கவின் நடித்துள்ள 'ஸ்டார்' படத்தின் மேக்கிங் பாடல் வெளியானது!

இயக்குனர் இலன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள 'ஸ்டார்' படத்தின் மேக்கிங் வீடியோ பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published Feb 16, 2024, 7:07 PM IST | Last Updated Feb 16, 2024, 7:07 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொள்ளும் அனைவரையுமே மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தாலும், இந்த நிகழ்ச்சியால் கிடைக்கும் பட வாய்ப்புகளை அனைத்து பிரபலங்களும் பெறுவது இல்லை. அந்த அதிஷ்டம் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களுக்கு மட்டுமே அமைகிறது. அந்த வகையில் ஹரிஷ் கல்யாணுக்கு அடுத்தபடியாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் தரமான படங்களை தேடி தேடி நடித்து வருபவர் கவின்.

டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர் கவின் தற்போது நடித்து வரும் திரைப்படம் ஸ்டார். இந்த படத்தை ஹரிஷ் கல்யாணி வைத்து 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கிய இயக்குனர் இலன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அதிதி போஹங்கார் நடிக்கிறார். மேலும் லால், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்கள். ஒரு சாதாரண இளைஞன் எப்படி ஸ்டார் ஆகிறான் என்பதே இந்த படத்தின் கதையம்சம் என தெரிகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, B.V.S.N பிரசாத் மாற்று ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் மேக்கிங் வீடியோவுடன் கூடிய பாடல், இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சற்றுமுன் வெளியாகி இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Video Top Stories