Star Movie Climax Video Making: சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட கிளைமேக்ஸ் காட்சின் வீடியோ மேக்கிங் வெளியானது!

கவின் நடிப்பில் வெளியாகி, திரையரங்குகளில் வெளியாகி வரும் ஸ்டார் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
 

Share this Video

பியார் பிரேமா காதல் படத்தின், வெற்றியை தொடர்ந்து இயக்குனர் இளன் இயக்கத்தில் கவின் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ஸ்டார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அதிதி போஹங்கர் நடித்துள்ளார். மேலும் லால், கீதா கைலாசம், ப்ரீத்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். 

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான இப்படம் தற்போது வரை சுமார் 250க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின், கிளைமேக்ஸ் காட்சி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நிலையில், அதன் வீடியோ மேக்கிங்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related Video