Japan Song: 'ஜப்பான்' படத்தில் கார்த்தி பாடியுள்ள... டச்சிங் டச்சிங் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது! வீடியோ

ராஜு முருகன் இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள 'ஜப்பான்' படத்தில் இருந்து... டச்சிங் டச்சிங் என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியானது.
 

First Published Oct 23, 2023, 9:03 PM IST | Last Updated Oct 23, 2023, 9:03 PM IST

'பொன்னியின் செல்வன்' படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் கார்த்தி நடிப்பில்  உருவாகியுள்ள 'ஜப்பான்' திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு ரிலீசாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்... தற்போது இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான டச்சிங் டச்சிங் பாடல் வெளியாகியுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு அனு இம்மானுவேல் கவர்ச்சியை வாரி இறைத்து கார்த்தியுடன் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த பாடலை நடிகர் கார்த்தி இந்திரவதி சௌஹானுடன் சேர்ந்து பாடியுள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த பாடல் தற்போது வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
 

Video Top Stories