கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வளியானது!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான கார்த்தி நடித்திருக்கும் 'வா வாத்தியார்' படத்தில் இடம்பெற்ற 'உயிர் பத்திக்காம..' எனும் முதல் சிங்கிள் லிரிக்கல் பாடல் வெளியாகி உள்ளது.
 

Share this Video

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தில் இருந்து தற்போது 'உயிர் பதிக்ககாம' என தொடங்கும் காதல் பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ளது.

Related Video