Rishab Shetty: கர்நாடகா தேர்தல்! வரிசையில் காத்திருந்து வாக்களித்தார் காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி.. வீடியோ!!

மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு, இன்று கர்நாடகாவில்  உள்ள 14 தொகுதிகளுக்கு இடையே பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் பிரபல நடிகர் ரிஷிப் ஷெட்டி வாக்களித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
 

First Published May 7, 2024, 5:15 PM IST | Last Updated May 7, 2024, 5:15 PM IST

கர்நாடகாவில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 227 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சி சில இடங்களில் நேரடியாக மோதலை சந்திக்க உள்ளது.

வாக்குப்பதிவை முன்னிட்டு, இன்று காலை முதலே... பொது மக்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் உட்பட அனைவருமே தங்களின் ஜனநாயக கடமையை நிறைவு செய்து வருகினார்கள்.  அந்த வகையில் 'காந்தாரா' படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகரும், இயக்குனருமான ரிஷப் செட்டி சிவ மொக்கா தொகுதிக்குட்பட்,ட உடுப்பி மாவட்டத்தில் உள்ள கெரோடி அரசு பள்ளியில் தன்னுடைய வாக்கினை வரிசையில் நின்று செலுத்தினார். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Video Top Stories